சோல்: தென்கொரிய, வடகொரியத் தலைவர்கள் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசியது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்று உலகமே பாராட்டும் வேளையில் அந்த சந்திப்புக்கு முக்கிய பங்காற்றியவர் தென் கொரிய உளவுத் துறை தலைவர் ஷு ஹூன் என்பது தெரியவந்துள்ளது. இரு கொரியாக்களின் தலைவர்களும் சந்தித்துப் பேசுவதற்காக கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக பணியாற்றியவர் திரு ஷு ஹூன். அவரது கனவு 18 ஆண்டுகளுக்குப் பின்னரே நிறைவேறியிருக்கிறது.
வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடன்பாடு பற்றி அறிவித்தபோது திரு ஷூ ஹூனின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் மல்கியது. திரு கிம்மின் தந்தையும் மறைந்த வடகொரியத் தலைவரு மான கிம் ஜோங் இல்-ஐ திரு ஷூ நேரில் சந்தித்துப் பேசியிருக் கிறார்.
2000, 2007 ஆம் ஆண்டுகளில் இரு கொரியாக்களின் உயர் அதிகாரிகள் சந்தித்துப் பேசுவதற்கு ஏற்பாடு செய்தவரும் அவரே. இதற்கிடையே இரு கொரியாக்களின் தலைவர்கள் சந்திப்பு புதிய அத்தியாயம் தொடங்குவதற்கான வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு என்று வட கொரிய ஊடகங்கள் தெரி வித்துள்ளன. தலைவர் கிம் மீது மக்கள் வைத்திருக்கும் அன்பையும் மதிப்பையும் இந்தச் சந்திப்பு காட்டுகிறது என்று அரசாங்க ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
அதேவேளையில், தென் கொரிய ஊடகங்கள், அணு ஆயுதங்களைக் கைவிடுவதற்கு வடகொரியாவிடம் இருந்து உறுதியான தகவல் எதுவும் வெளிவரவில்லை என்பதை சுட்டிக்காட்டி செய்தி களை வெளியிட்டுள்ளன.

