மியன்மாரில் மீண்டும் மோதல்: மக்கள் தப்பியோட்டம்

மியன்மாரில் மீண்டும் மோதல்: மக்கள் தப்பியோட்டம்

1 mins read
Google News Preferred Icon

யங்கூன்: மியன்மாரின் வடக்குப் பகுதியில் ராணுவத்தினருக்கும் இன கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மீண்டும் சண்டை மூண்டதைத் தொடர்ந்து ஆயிரக் கணக்கான மக்கள் அங்கிருந்து தப்பியோடியதாக தகவல்கள் கூறின. சீனாவை ஒட்டிய கச்சின் மாநிலத்திலிருந்து சுமார் 4,000 பேர் வெளியேறியுள்ளனர். சண்டை நடக்கும் பகுதியில் பலர் சிக்கிக் கொண் டிருப் பதாக உள்ளூர் அமைப்புகள் தெரி வித்துள்ளன. பொது மக்களின் பாதுகாப்பு குறித்து கவலைப் படுவதாக ஐநா கூறியுள்ளது.