பினாங்கு: இரு பேரணிகளோடு எதிர்க்கட்சிக் கூட்டணி பிரசாரம்

பினாங்கு: இரு பேரணிகளோடு எதிர்க்கட்சிக் கூட்டணி பிரசாரம்

2 mins read

ஜார்ஜ் டவுன்: பினாங்கில் எஸ்பிளனேட், தேவான் ஹாஜி அஹமது படாவிக்கு எதிரில் உள்ள திடல் ஆகியவற்றில் நடத் தப்பட்ட மாபெரும் பேரணி, பொதுக்கூட்டத்துடன் தேர்தல் பிரசாரத்தை பக்கத்தான் ஹரப் பான் எதிர்க்கட்சிக் கூட்டணி தொடங்கி உள்ளது. ஒரே சமயத்தில் இவ்விரு இடங்களிலும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டாலும் அங்கு மக்கள் கூட்டம் அதிகம் இருந்ததாகக் கூறப்படுகிறது. டிஏபியின் பொதுச் செயலாளர் லிம் குவான் எங், பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார், அமனா இளையர் துணைத் தலைவர் முகம்மது ஃபெய்ஸ் ஃபட்ஸில், பிபிபிஎம் கட்சியின் தலைவர் மர்ஸுகி யாஹ்யா ஆகிய தலைவர்கள் இந்தக் கூட்டங்களில் கலந்துகொண்டு நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளைப் பற்றிப் பேசினர். பிபிபிஎம் கட்சித் தலைவரான டாக்டர் மகாதீர் முகம்மதுவின் மகள் மரினா மகாதீர் சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்டார்.

அவரது உரையில் தமது தந்தை நாட்டுக்காகவும் மக்களுக் காகவும் தமது ஓய்வுக்காலத்தை யும் குடும்பத்தையும் விட்டுக் கொடுப்பதாகக் குறிப்பிட்டார். பினாங்கில் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளும் நம்பிக்கை இருப்பதாகவும் மத்திய அரசாங்க அளவில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்புவதாகவும் பக்கத்தான் தலைவர் லிம் குறிப் பிட்டார். முதல் அமைச்சராக தாம் மாநில, நாடாளுமன்ற இடங்களுக் காக நான்குமுனைப் போட்டியை எதிர்கொள்வதாகவும் அவர் சொன்னார். மாநிலங்களவைக்கு ஏர் புட்டி தொகுதியிலும் நாடாளுமன்றத் துக்கு பாகான் தொகுதியிலும் அவர் தனது பதவியைத் தற்காத் துக்கொள்ளப் போட்டியிடுகிறார். தேர்தலில் தோற்பது பற்றி பயப்படவில்லை என்று கூறிய அவர், தம்மைத் தேர்ந்தெடுப்பதா இல்லையா என மக்கள் முடிவெடுப்பர் என்றார்.