ஈரானுடனான ஒப்பந்தம் தொடர்பில் மத்திய கிழக்குடன் அமெரிக்கா ஆலோசனை

ஈரானுடனான ஒப்பந்தம் தொடர்பில் மத்திய கிழக்குடன் அமெரிக்கா ஆலோசனை

1 mins read

ரியாத்: ஈரான் மீது புதிய தடைகள் விதிப்பதற்கு ஆதரவு திரட்டும் நோக்கத்தில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அவசரப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ நேற்று முன்தினம் சவூதி அரேபியாவுக்குச் சென்றார். திரு போம்பியோ ஜெருசலம், அம்மானுக்கும் செல்வார் என்று கூறப்பட்டது. ஈரானின் ஏவுகணைத் திட்டத் துடன் தொடர்புடைய தனிநபர்கள், அமைப்புகள் மீது தடைவிதிக்கு மாறு உலக நாடுகளைக் கேட்டுக் கொள்வதாக திரு போம்பியோ வுடன் பயணம் மேற்கொண்டுள்ள மூத்த கொள்கை ஆலோசனை அதிகாரியான பிரையன் ஹூக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஏமனின் 'ஈரான் ஆதரவு' அமைப்பான ஹுதி இயக்கம் நேற்று முன்தினம் காலை மேற் கொண்ட ஏவுகணைத் தாக்கு தலில் ஒருவர் மாண்டதாக டெஹ் ரான் கூறியது.

ஈரானின் ஏவுகணைகள் மத்திய கிழக்கில் போரை நீட்டிப் பதுடன் சிரமத்தையும் ஏற்படுத்து கின்றன என்றும் அவை குறிப்பாக சவூதி அரேபியா, இஸ்ரேலைக் குறிவைத்துள்ளன என்றும் திரு பிரையன் சொன்னார். 2015ஆம் ஆண்டில் ஈரான் தனது அணுவாயுதத் திட்டத்தைக் கட்டுப்படுத்தினால் அதன் மீதான பொருளியல் தடைகள் நீக்கப்படும் என்று குறிப்பிட்டாலும் அந்த ஒப்பந்தத்தில் ஏவுகணைத் திட்டம் பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை. அந்த ஒப்பந்தத்தை 'மிகவும் மோசமானது' என்று குறிப்பிட்ட திரு டிரம்ப், பிரிட்டன், ஃபிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் இந்தப் பிரச்சினையைச் சரிசெய்யாவிட் டால் ஈரான் மீதான தடைகள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.