சிட்னி: மில்லியன் கணக்கில் சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் உலக பாரம்பரியச் சின்னமான 'கிரேட் பேரியர் ரீஃப்' பகுதியைப் பாதுகாக்க ஆஸ்திரேலியா அரை மில்லியன் வெள்ளியை ஒதுக்கியுள்ளது. பருவநிலை மாற்றம், பவளம் தின்னும் மீன்களின் பெருக்கம் காரணமாக பவளப்பாறைகள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. நீரின் தர மேம்பாடு, பவளப் பாறைகளை உண்ணும் மிருகங்களைக் கையாளுவது, பவளப்பாறைகளைப் பாதுகாக்கும் முயற்சிகளை விரிவுபடுத்துவது போன்ற நடவடிக்கைகளுக்காக $502 மில்லியன் செலவிடப்படும் என ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல் கூறியுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தில் 6.4 பில்லியன் ஆஸ்திரேலிய வெள்ளியைப் பங்களிக்கும் முக்கியமான சொத்தாக இவை விளங்குகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் தொடர்பில் 2030ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயுக்களின் வெளியீட்டை 26 முதல் 28% வரை குறைக்க ஆஸ்திரேலியா திட்டமிடுவ தாகச் சொல்லப்படுகிறது.

