மெக்சிகோ எல்லைச் சுவர் அமைக்க நிதி கோரி மிரட்டல் விடுத்த டிரம்ப்

1 mins read

வா‌ஷிங்டன்: மெக்சிகோவுடன் எல்லைச் சுவர் அமைக்க நிதி உதவி அளிக்காவிட்டால் செப்டம்பர் மாதத்தில் நிர்வாகத்தை முடக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். மிச்சிகனில் நடைபெற்ற பிரசாரப் பேரணியில் பேசிய திரு டிரம்ப், சுவர் தொடர்பான பணிகள் தொடங்கிவிட்டதாகவும் $1.6 பி. இருப்பதாகவும் கூறினார். நூற்றுக்கணக்கான மத்திய அமெரிக்கக் குடியேறிகள் கேரவன் மூலம் அமெரிக்கா வுக்குள் வருவதைச் சுட்டிக் காட்டிய திரு டிரம்ப், எல்லைப் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றார். குவாட்டமாலா, எல் சால்வெடார், ஹோண்டுராஸ் ஆகிவற்றைச் சேர்ந்த குடியேறிகள் பாதுகாப்புக்காக அமெரிக்கா செல்வதாகக் கூறியுள்ளனர்.