தைவான் தொழிற்சாலையில் தீயணைப்பு வீரர்கள் உட்பட எழுவர் பலி

தைவான் தொழிற்சாலையில் தீயணைப்பு வீரர்கள் உட்பட எழுவர் பலி

1 mins read
3618081b-86ae-445c-8e58-756e38813093
-
Google News Preferred Icon

தைப்பே: வடக்கு தைவானில் உள்ள மின்னணுவியல் தொழிற்சாலை ஒன்றில் மூண்ட தீ காரணமாக ஐந்து தீயணைப்பாளர்கள் உட்பட ஏழு பேர் இறந்துபோனதாக உள்ளூர் தீயணைப்புத் துறை தெரிவித்தது. தொழிற்சாலைக்குள் சிக்கியிருந்த மக்களைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்ட ஏழு தீயணைப்பாளர்கள் தீயில் சிக்கிக் கொண்டனர்.

நேற்று முன் தினம் இரவு பின்னேரத்தில் நிகழ்ந்த விபத்தில் சிக்கிய அவர்கள் நேற்றுக் காலை மீட்கப்பட்டனர். ஆனால், அவர்களில் இருவர் மட் டுமே உயிர்பிழைத்தனர். தீயணைப்பு வீரர்கள் தவிர தாய்லாந்தைச் சேர்ந்த இரண்டு ஊழியர்களும் தீக்கிரையாகினர். மேலும் ஏழு தீயணைப்பு வீரர்கள் காயமடைந்ததாகவும் அவர்களில் ஐவர் அடையாளம் தெரியாத திரவத்தினால் ஏற்பட்ட தீக்காயங்களால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டது. டீசல், நச்சு ரசாயனங்கள் போன்றவையும் சம்பவ இடத்தில் கண்டுபிடிக்கப் பட்டன. படம்: ராய்ட்டர்ஸ்