கோலாலம்பூர்: பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா, பத்து நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிடுவதைத் தடுத்ததற்காக தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் அதிகாரிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். வரும் மே 9ஆம் தேதி நடக்கவுள்ள தேர்தலில் அரசியலமைப்பு சட்டப்பட்டி பத்து தொகுதியில் போட்டியிடும் தகுதி தியான் சுவாக்கு உண்டு என நீதிமன்றம் அறிவிக்கக் கோரி திரு சுவா மனு தாக்கல் செய்திருப்பதாக அவரின் வழக்கறிஞர் இங்கியாவ் இங் கூறினார். தேர்தல் அதிகாரி அன்வார் முகம்மது ஜைன் மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக திரு சுவா வழக்கு தொடுத்துள்ளார். திரு சுவா சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யச் சென்றபோது ஏற்கெனவே அவர் நீதிமன்றத்தில் 2,000 ரிங்கிட் அபராதம் செலுத்தியிருப்பதைச் சுட்டிக்காட்டி அவரது மனு நிராகரிக்கப்பட்டது.
தேர்தல் அதிகாரிக்கு எதிராக பிகேஆர் உதவித் தலைவர் வழக்கு
1 mins read

