பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் பதவி விலகல்

பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் பதவி விலகல்

1 mins read

லண்டன்: பிரிட்டனில் சட்ட விரோதமாக குடியேறுப வர்களைத் தடுக்கும் நோக் கத்தில் "கவனக்குறைவுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களை வழிநடத்தியதாக எதிர்க்கட்சி கள் புகார் கூறிய வேளையில் தவறுக்கு பொறுப்பேற்று பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் அம்பர் ரட் பதவியிலிருந்து விலகியுள்ளார். கரீபியன் தீவுகளிலிருந்து பிரிட்டனில் குடியேறியவர்களில் பலருக்கு அண்மையில் மருத்துவ காப்பீடு உள்ளிட்ட சில திட்டங்கள் மறுக்கப்பட்டன. நீண்ட நாள் பிரிட்டன் வாசி களைச் சட்டவிரோதக் குடியேறி கள் என அடையாளப்படுத் தப்பட்டதில் முறைகேடு நடந் துள்ளதாக குற்றம் சாட்டிய அந்நாட்டு எதிர்க்கட்சிகள் திருமதி ரட் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தின.