பெய்ஜிங்: சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இந்த வாரம் வடகொரியாவுக்கு செல்ல விருப்பதாக அவரது அலுவலகம் தெரிவித்தது. பல ஆண்டு களுக்குப் பின்னர் சீன உயர் அதிகாரி ஒருவர் வடகொரியா செல்லவிருக்கிறார். சீனாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையில் உறவு மேம்பட இது வழிவிடும். இரு கொரியாக்களின் தலைவர்கள் சந்தித்துப் பேசிய பிறகு சீன வெளியுறவு அமைச்சர் பியோங்யாங் செல்லவுள்ளார். வடகொரிய வெளியுறவு அமைச்சர் ரி யோங் ஹோவின் அழைப்பை ஏற்று நாளை திரு வாங் யீ அங்கு செல்கிறார். சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் பெய்ஜிங்கில் சந்தித்துப் பேசிய பிறகு அவ்விரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் சந்தித்துப் பேசினர்.
வடகொரியா செல்லும் சீன வெளியுறவு அமைச்சர்
1 mins read

