சிரியா மீது ஏவுகணைத் தாக்குதல்கள்: ஈரானியர்கள் பலர் பலி

சிரியா மீது ஏவுகணைத் தாக்குதல்கள்: ஈரானியர்கள் பலர் பலி

1 mins read

டமாஸ்கஸ்: சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ராணுவத் தளங் களில் நடத்தப்பட்ட ஏவு கணைத் தாக்குதல்களில் பலர் பலியானதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக் கின்றன. ஹமா மற்றும் அலெப்போ மாநிலங்கள் தாக்கப் பட்டதாக ராணுவம் கூறியது. அத்தாக்குதல் களில் அரசாங்க ஆதரவுப் படையைச் சேர்ந்த 26 போராளிகள் கொல்லப்பட்டதாகவும் அதில் பெரும்பாலானோர் ஈரானியர்கள் என்றும் பிரிட்டனைச் சேர்ந்த கண்காணிப்புக்குழு கூறுகிறது.

அந்த ஏவுகணைத் தாக்குதல் களுக்கு யார் காரணம் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. அத்தாக்குதல்கள் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். முன்னதாக மேற்கத்திய நாடுகள் சிரியாவை தாக்கியுள்ளன. சிரியா வில் நடத்தப்பட்டதாக கூறப்படும் ரசாயன தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன். பிரான்ஸ் ஆகிய நாடுகள் சிரியா மீது தாக்குதலை நடத்தின.