காபூல்: ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் நேற்று இரு குண்டுகள் வெடித்ததில் புகைப்படக்காரர் ஒருவர் உட்பட குறைந்தது 25 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர். அவ்விரு வெடி குண்டு தாக்குதல்களுக் கும் இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்க வில்லை. அந்த குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து கந்தகார் மாநிலத்தில் வெடி குண்டு நிரப்பப்பட்ட கார் வெடித்ததில் சிறுவர்கள் 11 பேர் உயிரிழந்தனர். முதல் குண்டு, காபூலில் உளவுத் துறை அமைந்துள்ள பகுதியில் வெடித்ததில் நான்கு பேர் கொல்லப்பட்ட தாகவும் ஐந்து பேர் காயம் அடைந்ததாகவும் உள்துறை அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
அந்த குண்டு வெடிப்பு பற்றி தகவல் அறிந்து அதுபற்றி தகவல் சேகரிக்க அந்த இடத்திற்கு சென் றிருந்த பத்திரிகையாளர் கள், நிருபர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் கூட்ட மாக நின்றிருந்த இடத்தில் மற்றொரு குண்டு வெடித்த தாகவும் அந்த குண்டு வெடிப்பில் பலர் உயிரிழந்த தாகவும் இன்னும் பலர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த புகைப்படக்காரர் ஷா மாராய் இறந்தவர்களில் ஒருவர். சென்ற வாரம் ஆப்கானில் வாக்காளர் பதிவு மையத்தில் குண்டு வெடித்ததில் 60 பேர் உயிரிழந்தனர்.
காபூலில் குண்டு வெடித்த இடத்தில் பாதுகாப்புப் படையினர் கூடியுள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ்

