வாஷிங்டன்: ஈரானின் அணுவாயுத திட்டம் தொடர்பாக இஸ்ரேலுக்கு கிடைத்திருப்பதாகக் கூறப்படும் ரகசிய ஆவணங்கள், ஈரான் பொய் கூறியுள்ளதை காட்டுவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ கூறியுள்ளார்.
ஈரானுக்கும் உலகின் 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட அணுவாயுத உடன்பாடு நல்ல நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட வில்லை என்பதை இந்தத் தகவல் சுட்டிக்காட்டுவதாக போம்பியோ தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தத்தை கைவிடுவதற் கான விருப்பத்தை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் முன்பே தெரிவித்திருக்கிறார். வரக்கூடிய வாரங்களில் இது தொடர்பாக அவர் முடிவு எடுக்கவுள்ளார். முன்னதாக, அணு ஆயுத திட்டத்தை ஈரான் ரகசியமாக தொடர்ந்து வந்துள்ளதை நிரூபிக் கும் "ரகசிய கோப்புகள்" என்ற சில கோப்புகளைப் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு வெளியிட்டுள்ளார். அணு ஆயுதங் களைச் சோதனை செய்யவில்லை என்று கூறி ஈரான் உலக நாடுகளை ஏமாற்றி வந்துள்ளதைக் காட்டும் ஆயிரக்கணக்கான பக் கங்களைக் கொண்ட ஆவணங் கள் இஸ்ரேலுக்கு கிடைத்துள்ள தாக திரு நெட்டன்யாகு கூறியுள்ளார்.
ஈரான் மீது விதிக்கப்பட்ட தடைகளை நீக்குவதற்கு பிரதி பலனாக அணுவாயுதத் திட்டத்தை 2015ஆம் ஆண்டு கைவிட அந்நாடு ஒப்புக்கொண்டது. ஆனால் அந்த உடன்பாட்டுக்கு எதிராகவே ஈரான் நடந்து வந்துள்ளது என்பதை அந்த ரகசிய ஆவணங்கள் காட்டுவதாக திரு நெட்டன்யாகு குறிப் பிட்டுள்ளார்.
2003ஆம் ஆண்டு வரை ஈரான் ரகசிய ஆயுதத் திட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் அதன் பின்னரும் ரகசிய அணு வாயுத ஆற்றலைப் பெறுவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளதாகவும் திரு நெட்டன்யாகு குற்றம் சாட்டியுள்ளார். இஸ்ரேலின் குற்றச்சாட்டு ஏற்கெனவே ஐநா கண்காணிப்பு அமைப்பு ஒன்று கூறிய பழைய குற்றச்சாட்டுகளின் மறுபதிப்பு என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஜாவிட் சரீப் தெரிவித்துள்ளார்.
ஈரானுடனான அணுவாயுத உடன்பாட்டில் இணைந்திருப்பது தொடர்பான அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவில் பாதிப்பை ஏற்படுத்த நெட்டன்யாகுவின் குழந்தைத்தனமான நடவடிக்கை இது என்று ஈரானிய அமைச்சர் கூறியுள்ளார்.

