மலேசியத் தேர்தல்: தியன் சுவா: வாய்ப்பு இல்லாவிடில் மற்ற வேட்பாளர்களை ஆதரிப்பேன்

மலேசியத் தேர்தல்: தியன் சுவா: வாய்ப்பு இல்லாவிடில் மற்ற வேட்பாளர்களை ஆதரிப்பேன்

1 mins read

கோலாலம்பூர்: மலேசியாவில் நடக்கவுள்ள தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றால் தேசிய முன்னணி வேட்பாளர் அல்லாத பத்து நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்களை ஆதரிக்கப் போவதாக பிகேஆர் உதவித் தலைவர் தியன் சுவா கூறியுள்ளார்.

திரு சுவாவின் வேட்பு மனுவை தேர்தல் ஆணைய அதிகாரி நிராகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திரு சுவா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். அந்த வழக்கு விசாரணை இன்று நடைபெறவுள்ள வேளையில், நீதிமன்றத்தின் தீர்ப்பு தனக்குச் சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை என்று திரு சுவா கூறியுள்ளார். இதற்கிடையே கோலாலம்பூரில் நேற்று ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கான பிகேஆர் உறுப்பினர்கள் திரு தியன் சுவாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.