மலேசியத் தேர்தல்: 'லிம் கிட் சியாங், மகாதீர், அன்வாருக்கு இது இறுதித் தேர்தலாக இருக்கலாம்'

மலேசியத் தேர்தல்: 'லிம் கிட் சியாங், மகாதீர், அன்வாருக்கு இது இறுதித் தேர்தலாக இருக்கலாம்'

1 mins read

கோலாலம்பூர்: மலேசியாவில் ஜனநாயக செயல் கட்சியின் தலைவர் லிம் கிட் சியாங், தனக்கும் திரு மகாதீருக்கும் அன்வார் இப்ராகிமுக்கும்கூட வயதாகிக்கொண்டே இருப்பதால் வரும் தேர்தல் இறுதித் தேர்தலாக இருக்கக்கூடும் என்று கூறியுள்ளார்.

"எனக்கு 77 வயதாகிறது. இந்தத் தேர்தல் எனக்கு 12வது தேர்தல். மகாதீருக்கு வயது 93. இன்னும் ஐந்தாண்டுகளில் 15வது பொதுத் தேர்தலிலும் அரசியல் மாற்றத்துக்காக அவர் போராட வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கப் போவதில்லை," என்று லிம் கூறினார். அன்வார் ஜூன் 8ஆம் தேதி விடுதலையாவார்.

இன்னும் ஐந்து மாதங்களில் அவருக்கு வயது 71. வரும் தேர்தலில் ஹரப்பானால் அரசாங்கத்தை அமைக்க முடியாமல் போகுமானால் அன்வாரால் நாட்டின் எட்டாவது பிரதமராக ஆக முடியாது. அப்படிப்பட்ட நிலையில் அடுத்த தேர்தலில் அரசியல் மாற்றத்துக்காக அவர் முன்னின்று போராடுவதை நினைத்துப் பார்க்கவே சிரமமாக உள்ளது", என்று லிம் கூறினார். ஆகவே அடுத்த வாரம் நடைபெறவுள்ள தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல் என்று அவர் குறிப்பிட்டார்.