அமைதிக்கான நோபெல் பரிசுக்கு டிரம்ப் தகுதியானவர்

அமைதிக்கான நோபெல் பரிசுக்கு டிரம்ப் தகுதியானவர்

1 mins read

சோல்: வடகொரியாவின் அணுவாயுதத் திட்டம் தொடர்பில் அந்நாட்டுடன் நிலவிய மோதல் போக்கை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்காக அவருக்கு அமைதிக்கான நோபெல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் அதற்கு அவர் தகுதியானவர் என்றும் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் கூறியுள்ளார். கொரிய வட்டாரத்தில் அமைதியை மட்டுமே விரும்பு வதாகக் கூறிய அவர், முக்கிய நிகழ்வுகளுக்கு டிரம்ப்பே காரணம் என்று குறிப்பிட்டார்.