ஆஸ்திரேலியப் பிரதமருடன் பிரெஞ்சு அதிபர் பேச்சு

ஆஸ்திரேலியப் பிரதமருடன் பிரெஞ்சு அதிபர் பேச்சு

1 mins read

சிட்னி: ஆஸ்திரேலியா சென்றுள்ள பிரெஞ்சு அதிபர் மெக்ரோன் ஆஸ்திரேலியப் பிரதமருடன் பல்வேறு அம்சங்கள் குறித்து பேச்சு நடத்தவுள்ளார். வர்த்தகம், தற்காப்பு மற்றும் பருவநிலை மாற்றம் குறித்து அவ்விரு தலைவர்களும் பேச்சு நடத்துவர் என்று தெரிகிறது. முன்னதாக திரு மெக்ரோனுக்கு ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல் நேற்றிரவு விருந்தளித்து உபசரித்தார்.

பிரெஞ்சு நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப் பட்டுள்ள 50 பில்லியன் ஆஸ்தி ரேலிய டாலர் மதிப்பிலான ஒப்பத்தம் குறித்து இரு தலைவர் களும் இன்று கலந்துரையாடுவர் என்று கூறப்படுகிறது. 12 நீர்மூழ்கிக் கப்பல்களை உரு வாக்க பிரெஞ்சு நிறுவனத்திற்கு குத்தகை வழங்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு ராணுவ மற்றும் கடற்படை அதிகாரிகளுடன் திரு மெக்ரோன் ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.

இவ்விரு நாடுகளும் மாதிரி யான பாதுகாப்பு பிரச்சினைகளை எதிர்நோக்குகிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் ஆஸ்தி ரேலியா தடையற்ற வர்த்தக உடன்பாடு செய்து கொள் வதற்கான சாத்தியம் உள்ளதாகத் தெரிகிறது.