தொழிலாளர் தினமான நேற்று உலகெங்கிலும் தொழிலாளர்களும் தொண்டர்களும் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணிகளை நடத்தினர். சம்பள உயர்வு, சமூக நலன் போன்ற தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு காண வேண்டும் என்று தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.
பிலிப்பீன்ஸ், தென்கொரியா உள்ளிட்ட பல நாடுகளில் அரசாங்கத்திற்கு எதிராக பேரணிகள் நடைபெற்றன. இந்தோனீசியாவிலும் 10,000 ஊழியர்கள் சம்பள உயர்வு, வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு சேர்ப்பதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பேரணி நடத்தினர். படம்: ஏஎஃப்பி

