மலேசியத் தேர்தல் பிரசாரத்தில் அனல் பறந்து வரும் வேளையில் பிரதமர் நஜிப் ரசாக் பல்வேறு வாக்குறுதிகளை வாக்காளர் களுக்கு வழங்கியுள்ளார். தேசிய முன்னணி மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தால் குறைந்தபட்ச ஊதியத்தை உடனே உயர்த்துவது, கட்டாய தந்தையர் விடுப்பு அளிப்பது, ஊழியர ணிக்கு 60 மில்லியன் ரிங்கிட் ($20.3 மில்லியன்) பெறுமான உதவி மானியங்களை வழங்கு வது போன்றவை அந்த வாக் குறுதிகளுள் அடங்கும். குறைந்தபட்ச ஊதியம் புதிய விகிதத்துக்கு உயர்த்தப்படும் என்றும் அது பற்றிய அறிவிப்பு ஆண்டின் பிற்பாதியில் அறி விக்கப்படும் என்றும் திரு நஜிப் கூறினார்.
தற்போதைய குறைந்தபட்ச மாத ஊதியம் மலேசியாவில் 1,000 ரிங்கிட்டாகவும் கிழக்கு மலேசிய மாநிலங்களான சாபா, சரவாக் ஆகியவற்றில் 920 ரிங் கிட்டாகவும் உள்ளன. அம்னோ தலைமையிலான கூட்டணிக்கு பெரும்பான்மை மலாய் முஸ்லிம் மக்களின் ஆத ரவு சரிந்து வருவதாகக் கூறப் படும் நிலையில் திரு நஜிப் நேற்று கோலாலம்பூரில் நடந்த தொழிலாளர் தின நிகழ்ச்சி ஒன்றில் இந்த வாக்குறுதிகளை வாரி வழங்கினார்.
"நாட்டு மக்களின் நலனைப் பாதுகாக்கவும் பொதுமக்களின் விருப்பத்திற்கு முன்னுரிமை அளிக்கவும் திட்டங்களை நடை முறைப்படுத்த அரசாங்கம் பெரி தும் முயன்று வருகிறது. இப் போதைய நிலவரத்தில் அரசாங் கத்திற்கு விசுவாசத்தைக் காட்டு வது என்பது அத்தியாவசியக் கடமை," என்றார் அவர்.
மேலும், எம்டியுசி எனப்படும் மலேசிய தொழிற்சங்க காங்கி ரசுக்கு 3 மில்லியன் ரிங்கிட் பெறு மான சிறப்பு உதவி மானியத் தையும் திரு நஜிப் நேற்று அறி வித்தார். எம்டியுசியின்கீழ் உள்ள தனியார் துறையைச் சேர்ந்த 300 தொழிற்சங்கங்களுக்குப் பகிர்ந் தளிப்பதற்காக அந்த உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
"கொடுப்பதற்கு இறைவன் தயாராக இருக்கிறான். மே 9க்குப் (வாக்களிப்பு நாள்) பிறகு என்னால் இன்னும் அதிகமாகத் தரமுடியும்," என்றார் மலேசியப் பிரதமர்.

