மலேசிய தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நாளில் 84 வேட் பாளர்களின் வைப்புத்தொகை யோடு தலைமறைவான ஆடவரை போலிஸ் தேடுகிறது.
உஸ்னோ பாரு கட்சி சாபா, லாபுவான் மாநிலங்களிலுள்ள 26 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 60 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்தது. அந்த 86 தொகுதிகளுக்கான வேட்பாளர் களும் தேர்ந்து எடுக்கப்பட்டனர். கடந்த சனிக்கிழமை அவர்கள் அத்தனை பேரும் வேட்பு மனுத் தாக்கல் செய்ய ஆர்வத்துடன் திரண்டிருந்தனர்.
அவர்களுக்காகச் செலுத்தப் பட வேண்டிய வைப்புத்தொகை யான 870,000 ரிங்கிட்டை நிர்வாகி ஒருவரிடம் கட்சித் தலைமை கொடுத்தனுப்பியது. ஆனால், அந்த நபரோ மொத்த பணத்தையும் சுருட்டிக் கொண்டு தலைமறைவாகிவிட் டார். வேட்பு மனுத்தாக்கல் செய் வதற்கான கடைசி நேரம் நெருங் கிய வேளையில் இரு வேட்பாளர் கள் மட்டும் தங்களது சொந்தப் பணத்தைச் செலுத்தினர். அவர் களின் மனுக்கள் ஏற்றுக்கொள் ளப்பட்டு வேட்பாளர்களாக அறி விக்கப்பட்டனர்.
ஆனால் எஞ்சிய 84 பேரும் ஏமாற்றத்துடன் வீடு திரும் பினர். வைப்புத்தொகை காணா மல் போனது தொடர்பாக தங் களுக்கு புகார் வந்திருப்பதாகத் தெரிவித்த சாபா காவல்துறை ஆணையாளர் ராம்லி டின் பணத்துடன் ஓடியவரைத் தேடி வருவதாகக் கூறினார்.

