கொரியப் பூசலை முடிவுக்குக் கொண்டு வருவதன் அடையாள மாக அமைதி உடன்பாடு காணப் பட்டாலும் தமது நாட்டில் அமெ ரிக்க துருப்புகள் நிலைகொண்டு இருக்கும் என்று தென்கொரியா கூறியுள்ளது. அமெரிக்கப் படைகளை திருப்பி அனுப்பும் பேச்சுக்கே இட மில்லை என்று தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் கூறியதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் நேற்று தெரிவித்தது. "தென்கொரிய அமெரிக்கப் படைகள் (யுஎஸ்ஃஎப்கே) என்பது தென்கொரிய=அமெரிக்க நட்பு தொடர்பான ஒன்று.
அமைதி உடன்பாடு கையெழுத் தாவதற்கும் இதற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று அதிபர் கூறிவிட்டார்," என அதிபரின் பேச்சாளர் கிம் எயுயி கியேவோம் குறிப்பிட் டுள்ளார். தென்கொரிய அதிபரின் ஆலோசகரும் கல்வியாளருமான மூன் சுங் இன் எழுதிய ஒரு கட் டுரை தொடர்பாக செய்தியாளர் வினவியதற்கு அந்தப் பேச்சாளர் இவ்வாறு கூறினார். அமைதி உடன்பாடு கையெழுத் திடப்பட்டால் தென்கொரியாவில் அமெரிக்கப் படைகள் நீடிப்பதை நியாயப்படுத்துவது கடினமாக இருக்கும் என்று அக்கட்டுரையில் மூன் குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால் இவரது கருத்தை அதிபரோ அரசாங்கமோ ஏற்க வேண்டிய அவசியமில்லை என்று அதிபர் மாளிகை அதிகாரி கூறி னார். மேலும், அதிபர் மேற்கொண்டு வரும் முயற்சிகளில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று ஆலோசகர் கேட்டுக்கொள்ளப் பட்டதாகவும் பேச்சாளர் கூறினார். இதற்கிடையே, தென்கொரியா வுடன் இணைந்து கூட்டுப் பயிற் சியைத் தொடருவதற்காக அமெ ரிக்காவின் எஃப்=22 போர் விமானங்கள் சோல் வந்து சேர்ந்து விட்டதாக நேற்று தென்கொரியா அதிகாரபூர்வமாகக் கூறியது.
எஃப்=22 அமெரிக்கப் போர் விமானம். கோப்புப் படம்

