கோலாலம்பூர்: மலேசிய பொதுத் தேர்தலின் பரபரப்பு பர்கர் கடை யையும் விட்டுவைக்கவில்லை. பினாங்கில் உள்ள 'அங்கிள் லான்ஸ்' என்ற கடையின் உரிமை யாளர் 'நாசி லெம்மா', 'சிக்கன் சாப்ஸ்' பர்கரில் பல கட்சிகளின் சிறிய கொடிகளைக் குத்தி உணவு மீதான ஆர்வத்தை கூட்டியுள்ளார். இது குறித்து பேசிய கடை உரிமையாளர் நூர் அஸ்லான் அரிஃப், 42, "குட்டி கட்சி கொடி களுடன் வழங்கப்படும் பர்கரை வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்குகின்றனர்," என்றார்.
"உணவுடன் தாங்கள் விரும் பிய கட்சிக் கொடியையும் பார்த்து வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடை கின்றனர். அதிருப்தியடையும் சில வாடிக்கையாளர்கள் கட்சிக் கொடியை மாற்றச் சொல்லி கேட் கின்றனர்," என்று அவர் சொன் னார். "தேர்தலை நினைவூட்டவும் எங்களுடைய உணவு வகைகளை பிரபலப்படுத்தவும் இந்த யோச னையை புகுத்தியிருப்பதாக ஸ்ட் ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த பேட்டியில் நூர் அஸ்லான் அரிஃப் குறிப்பிட்டார்.
உணவு சாப்பிடும் போது கட்சி பாகுபாடு தேவையில்லை என்பதுபோல தேசிய முன்னணி, பாஸ் கட்சி, பக்கத்தான் ஹரப்பான், மலேசிய பெர்சத்து பிரிபூமி, பிகேஆர், ஜனநாயக செயல் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் சிறிய கொடிகளைத் தாங்கியுள்ள 'நாசி லெம்மா' பர்கர்.

