டிரம்ப்புக்கு அழைப்பாணை அனுப்புவதாக மிரட்டிய முல்லர்

டிரம்ப்புக்கு அழைப்பாணை அனுப்புவதாக மிரட்டிய முல்லர்

1 mins read
75d9ef93-9cb9-4092-a3ff-053dbfd580d8
-

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யத் தலையீடு குறித்த விசாரணையில் ஜூரர்கள் முன்னிலையில் முன்னிலையாக அதிபர் டிரம்புக்கு அழைப்பாணை அனுப்பும் சாத்தியம் குறித்து சிறப்பு விசாரணை அதிகாரி ராபர்ட் முல்லர் எச்சரித்திருந்ததாக அமெரிக்க ஊடகம் ஒன்று தெரி வித்தது. கடந்த மார்ச் மாதம் டிரம்ப்பின் வழக்கறிஞருடன் விவாதித்தபோது அழைப்பாணை அனுப்பும் யோச னையை முல்லர் வெளியிட்டார். இதனால் விசாரணையாளர் களின் கேள்விகளை எதிர் நோக்கும் கட்டாயத்தை அதிபர் டிரம்புக்கு ஏற்படுத்தியிருந்தது என்று வா‌ஷிங்டன் போஸ்ட் அறிக்கை குறிப்பிட்டது. சிறப்பு விசாரணை அதிகாரி ஒருவர், டிரம்ப்பை கட்டாய விசார ணைக்கு உட்படுத்தும் சாத்தியம் குறித்த யோசனையை வெளியிட் டது இதுவே முதல் முறை என்று நம்பப்படுகிறது.

மார்ச் மாதம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எந்த வித விசாரணையையும் அதிபர் எதிர்நோக்க வேண்டிய அவசியம் இல்லை என்று டிரம்ப்பின் வழக் கறிஞர்கள் வலியுறுத்தியிருந்தனர். இருப்பினும் அதிபருக்கு அழைப்பாணை அனுப்பும் யோச னையை முல்லர் குழுவினர் வெளி யிட்டதாகத் தெரிகிறது. இதை ஏற்க டிரம்ப் மறுத்தால் டிரம்ப்பிடம் கேட்கவேண்டிய கேள்விகளின் பட்டியலை அவரது வழக்கறிஞர்களிடம் வழங்கவும் முல்லர் குழுவினர் முன்வந்தனர். அதிபரின் முன்னாள் வழக் கறிஞர் ஜான் டோட்டும் அந்தச் சந்திப்பின்போது அதிபருக்கு அழைப்பாணை அனுப்பும் சாத் தியம் குறித்து முல்லர் குறிப்பிட் டதை உறுதிப்படுத்தினார். இதன் பிறகே டோட் பதவி விலகினார்.