வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மீது பாலியல் புகார் கூறிய ஆபாசப் பட நடிகை ஸ்டோமி டேனியல் அதுபற்றி வெளியில் சொல்லாமல் இருக்க அவருக்கு 130,000 டாலர் பணம் கொடுக்கப் பட்டதாகவும் திரு டிரம்ப்பின் வழக்கறிஞர் மைக்கல் கோகன் அந்தப் பணத்தை அந்த நடிகைக்கு கொடுத்ததாகவும் கூறப்பட்டது. அந்தப் பணத்தை திரு டிரம்ப், அவரது வழக்கறிஞர் மைக்கல் கோகனிடம் திருப்பிக் கொடுத்துவிட்டதாக திரு டிரம்ப்பின் சட்ட ஆலோசகர் ருட் கியூலானி தெரிவித்துள்ளார். 2016ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னதாக தனது வழக்கறிஞர் அந்த நடிகைக்கு பணம் கொடுத்தது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று திரு டிரம்ப் கூறியிருந்தார். இந்நிலையில் கியூலானி கூறியிருப்பது திரு டிரம்ப்பின் கூற்றுக்கு மாறாக உள்ளது.
ஸ்டோமி டேனியல் புகார்: பணத்தை வழக்கறிஞரிடம் திருப்பிக் கொடுத்த டிரம்ப்
1 mins read

