புத்ராஜெயா: இந்த முறையும் தேசிய முன்னணிக்கே ஆட்சி அதிகாரத்தை வழங்குமாறு இந்திய மக்களை மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் கேட்டுக் கொண்டார். "ஆட்சியை தேசிய முன்னணியிடம் கொடுங்கள். இந்தியர்களே நீங்கள் பின்தங்க மாட்டீர்கள்," என்று அவர் உறுதியளித்தார். தேசிய நீரோட்டத்திலிருந்து பின்தங்கிவிடாமல் இருக்க, நாட்டையும் அனைத்து சமூகத் தினரையும் முன்னேற்ற அரசாங் கத்திற்கு கால அவகாசம் தேவை. அதிலும், சமூக-பொருளியல் துறையில் தாங்கள் பின்தங்கி யுள்ளோம் என்று ஆதங்கப்படும் இந்தியர்கள் மற்றும் இந்திய முஸ்லிம் சமூகத்தினரையும் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் கடப்பாட்டை அரசாங்கம் கொண்டிருப்பதாக, திரு நஜிப் கூறினார். அந்தக் கடப்பாட்டின் அடிப்படையில்தான், மலேசிய இந்தியர் வியூகத் திட்டத்தை அரசாங்கம் கொண்டு வந்ததாக அவர் சொன்னார்.
இந்தியர்களின் மேம்பாட்டுக்கான முழுமையான திட்டமாக இது உள்ளது. புத்ராஜெயாவில் சில அமைப்புகளுடனான கலந்துரை யாடல் நிகழ்ச்சிக்கு வந்திருந்த நஜிப் இது குறித்துப் பேசினார். சுங்கை கோயான் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் மலேசிய பிரதமர் நஜிப் கலந்துகொண்டார். படம்: பெர்னாமா

