எதிர்க்கட்சிக்கு ஆதரவாக முன்னாள் நிதி அமைச்சர் டாயிம் பிரசாரம்

எதிர்க்கட்சிக்கு ஆதரவாக முன்னாள் நிதி அமைச்சர் டாயிம் பிரசாரம்

1 mins read

கோலாலம்பூர்: மலேசியத் தேர்தலில் மிகப் பெரிய திருப்புமுனையாக முன்னாள் நிதி அமைச்சர் டாயிம் சைனுதின் எதிர்க்கட்சிக்கு தனது ஆதரவைத் தெரிவித்ததுடன் தீவிர தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளார். தேசிய முன்னணி அரசாங்கத்தை அகற்றுமாறு லெம்பா பந்தாய் வாக்காளர்களை டாயிம் சைனுதின் கேட்டுக்கொண்டார். பொருள் சேவை வரி நடப்பில் இருப்பதை அவர் சாடினார். 1990களில் அவர் நிதி அமைச்சராக இருந்த காலத்தில் அவ்வாறான வரியை விதிக்கவே இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். பக்கத்தான் ஹரப்பானின் லெம்பா பந்தாய் வேட்பாளர் ஃப்பாமி ஃபாட்ஸிலுக்கு ஆதரவளிக்க அவர் உறுதியளித்தாரா.