கோலாலம்பூர்: பிகேஆர் துணைத் தலைவர் வரும் தேர்தலில் போட்டியிடுவாரா என்பது இன்று தெரியவரும். அவரது வேட்புமனுவை ஏற்றுக்கொளள தேர்தல் ஆணைய அதிகாரி மறுத்ததைத் தொடர்ந்து அந்த அதிகாரிக்கு எதிராக திரு சுவா வழக்குத் தொடுத்துள்ளார். தேர்தலில் தான் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திரு சுவா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு குறித்து விசாரணை நடத்திய உயர் நீதிமன்ற நீதிபதி நூர்தின் ஹசான், இன்று தனது முடிவை அறிவிப்பதாகத் தெரிவித்தார். கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நாளன்று திரு சுவாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
மலேசியத் தேர்தல்: தியன் சுவா போட்டியிடுவாரா என்பது இன்று தெரியவரும்
1 mins read

