நஜிப் போட்டியிடும் பாகாங் மீது அனைவரின் கவனம்

1 mins read

கோலாலம்பூர்: மலேசியாவில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் தற்போது அனைவரின் கவனமும் பிரதமர் நஜிப் ரசாக் போட்டியிடும் பாகாங் தொகுதி மீதுதான் உள்ளது. தேர்தல் நெருங்கும் வேளை யில் திரு நஜிப் அவரது சொந்தத் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் திரு நஜிப்பிற்கு எதிராக போட்டிக்களத்தில் இறங்கியுள்ள முன்னாள் பிரதமர் மகாதீர், வியாழக்கிழமையன்று பிரதமர் நஜிப்பின் சொந்தத் தொகுதியான பெக்கானில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண் டார். பெக்கானில் உள்ள அம்னோ அலுவலகத்திற்கு முன்பு இருந்த காஃப்பிக் கடையில் திரு மகாதீர் பிரசாரத்தை மேற்கொண்டார்.

பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மகாதீருக்கும் பிரதமர் நஜிப்புக்கும் இடையிலான அரசியல் போரை நஜிப்பின் வாசல் படிக்கே கொண்டுவந்து விட்டார் மகாதீர் என்று பரவலாகப் பேசப்படுகிறது. பெக்கானில் அம்னோ அலுவலகத்திற்கு எதிரே இருக்கும் காஃப்பிக் கடை பகுதியில் மகாதீர் புன்னகையோடு படம் எடுத்துக்கொள்ளும் காட்சி கள் முகநூலில் பதிவு செய்யப் பட்டுள்ளன.

எதிர்க்கட்சிக் கூட்டணித் தலைவர் மகாதீர் புத்ராஜெயாவில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். படம்: ஏஎஃப்பி