ஜகார்த்தா: இந்தோனீசியப் போலிசார் மேற்கொண்ட இரு வெவ்வேறு சோதனைகளின் போது கைப்பற்றப்பட்ட 2.6 டன் போதைப்பொருள் நேற்று அழிக் கப்பட்டதாக தகவல்கள் கூறின. போதைப்பொருள் கடத்தல், போதைப்பொருள் விநியோகம் போன்ற நடவடிக்கைகளை முறியடிக்க இந்தோனீசியப் போலிசார் தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள் ளனர். போதைப்பொருள் குற்ற வாளிகளுக்கு இங்கு கடும் தண்டனை விதிக்கப்பட்ட போதி லும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் அதிகரித்து வந்துள்ளன.
தற்போது இந்தோனீசியப் போலிசார் பறிமுதல் செய்த கிறிஸ்டல் வகையைச் சேர்ந்த போதைப்பொருள் இரு வெளி நாட்டு கப்பல்களிலிருந்து கைப்பற்றப்பட்டவை என்று இந்தோனீசிய உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்ட இரு கப்பல்களிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் பொட்டலங்களை அழிப்பதற்கு முன்பு போலிசார் அவற்றை காட்சிக்கு வைத்தனர். படம்: ஏஎஃப்பி

