மலேசியத் தேர்தல்: தேசிய முன்னணி- பாஸ் கூட்டணி அமைய வாய்ப்பு

மலேசியத் தேர்தல்: தேசிய முன்னணி- பாஸ் கூட்டணி அமைய வாய்ப்பு

1 mins read

கோலாலம்பூர்: 14வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பாஸ் கட்சியும் தேசிய முன்னணியும் சேர்ந்து கூட்டணி அரசாங்கம் அமைத்தால் அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை என பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாதி அவாங் கூறியுள்ளார். சில நிபந்தனைகளை தேசிய முன்னணி எற்றுக்கொண்டால் மட்டுமே அத்தகைய கூட்டணி அரசாங்கம் அமைய வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறினார். ஆனால் பாஸ் கட்சியின் நிபந்தனைகள் என்ன என்பதைக் கூற அவர் மறுத்துவிட்டார்.