கோலாலம்பூர்: 'பத்து' நாடாளு மன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் சட்டத்துறை மாணவரான 22 வயது பி. பிரபாகரனுக்கு பிகேஆர் அங்கீகாரம் வழங்கியுள்ளது. 'பத்து' நாடாளுமன்றத் தொகுதியை தேசிய முன்னணி கைப்பற்றுவதை தவிர்க்கும் முயற்சியாக சுயேச்சை வேட்பாளர் பிரபாகரனை ஆதரிக்க அக்கட்சி முடிவு செய்தது. அத்தொகுதியில் போட்டி யிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா தேர்தலில் போட்டியிட முடியாது என்று உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து சுயேச்சை வேட்பாளர் பிரபாகரனுக்கு பிகேஆர் ஆதரவு தெரிவித்துள்ளது.
மலேசியத் தேர்தல்: 'பத்து' தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் பிரபாகரன்
1 mins read

