மலேசியாவின் 14வது பொதுத் தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலையுடன் நிறைவுபெற இருக் கிறது. வாக்களிப்புக்கு இன்னும் ஒரு சில நாட்களே எஞ்சி இருக் கும் நிலையில் ஆரம்பக்கட்ட தேர் தல் நேற்று நடைபெற்றது. ராணு வத்திலும் போலிசிலும் பணியாற்று பவர்கள் நேற்று தங்களது மனைவி, கணவன்மார்களுடன் சென்று வாக்களித்தனர். கிட்டத்தட்ட 270,000 பணி யாளர்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்களுக்கென வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டு நேற்று மாலை வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. வெளிநாடுகளில் வசிக்கும் சுமார் 4,000 மலேசியர்களும் நேற்று தங்களது அஞ்சல் வாக்கை செலுத்தினர். ஆனால் தங்களது வாக்குகள் உரிய நேரத்திற்குள் மலேசியா சென்று சேருமா என்ற சந்தேகத்தை அவர்கள் எழுப்பினர். இதற்கிடையே, நேற்றைய வாக்குப்பதிவிற்குப் பிறகு வாக்குப் பெட்டிகளின் பாதுகாப்புக்கு மலே சிய தேர்தல் ஆணையம் உறுதி கூறி உள்ளது.

