தேர்தல் ஆணையம்: போலி வாக்காளர்கள் என்பது வெறும் புரளி

தேர்தல் ஆணையம்: போலி வாக்காளர்கள் என்பது வெறும் புரளி

1 mins read

கோலாலம்பூர்: போலி வாக்காளர்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் மக்களைக் குழப்புவதற்காகவே இவ்வாறு புரளியை சிலர் கிளப்பி விடுவதாகவும் தேர்தல் ஆணையத் தலைவர் முகமட் ஹசீம் அப்துல்லா தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தின் மீது தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்துவதற்காகவே பொறுப்பற்ற சில தரப்பினர் இவ்வாறான வதந்திகளை உருவாக்குகிறார்கள் என்று அவர் கூறினார். வாக்காளர்கள் தாங்கள் வாக்களிக்கும் தொகுதிகளில்தான் வசிப்பார்கள் என்றில்லை. அவர்கள் வேறிடங்களில் தங்கியிருப்பார்கள். வாக்களிப்பதற்காக மட்டுமே அவரவர் தொகுதிக்கு ஐந்தாண்டுக்கு ஒரு முறை வருபவர்களாக இருப்பார்கள். அதனால், புது முகங்களைப் பார்க்கும்போது அவர்களைப் போலி வாக்காளர்கள் எனக் கருதுகிறார்கள் போலும் என முகமட் ஹசீம் கூறினார்.