சோல்: உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்-வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் சந்திப்பு பெரும்பாலும் சிங்கப்பூரில் நடை பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ள தாகவும் அந்த சந்திப்பு வரும் ஜூன் மாத மத்தியில் நடைபெறலாம் என்றும் தென்கொரிய நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. திரு டிரம்ப்பின் விருப்பத்திற்கு ஏற்ப அந்த சந்திப்பு கடைசி நேரத்தில் இரு கொரியாக் களையும் பிரிக்கும் எல்லைப் பகுதியில் உள்ள பான்முன்ஜோம் கிராமத்தில் நடைபெறுவது சாத்தியம்.
/.என்றாலும் கூட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அக் கூட்டத்தை ஏற்று நடத்த சிங்கப்பூர் வலுவான நாடாகக் கருதப்படுகிறது என்று வாஷிங்டனில் அரச தந்திரத் தகவல்கள் தெரிவிப்பதாக சோசுன் இல்போ எனும் நாளேடு குறிப்பிட்டுள்ளது. திரு டிரம்ப் வரும் ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் கனடாவில் நடக்கும் ஜி-7 கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதன் பிறகு ஜூன் மாதத்தில் மூன்றாவது வாரத்தில் திரு கிம்மை சந்தித்துப் பேசக்கூடும் என்று அந்த நாளேடு கூறியது. திரு கிம்மை சந்தித்துப் பேசுவதற்கான இடம், தேதி இவை தீர்மானிக்கப்பட்டுவிட்டதாக திரு டிரம்ப் வெள்ளிக்கிழமை அறி வித்தார். அதுபற்றி விரைவில் அறிவிக்கவிருப்பதாக திரு டிரம்ப் டெக்சஸ் மாநிலத்திற்கு புறப்படு வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் கூறினார்.

