அசுத்தமான கால்வாய் நீரைப் பருகியதில் 10 பேர் பலி; 121 பேருக்குச் சிகிச்சை

1 mins read

நோம்பென்: அசுத்தமான நீரைப் பருகிய கம்போடியாவின் ஸ்ரீ நோன் கிராம மக்கள் 10 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் 121 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கிராட்டி வட்டார துணைத் தலைமைக் காவல் அதிகாரி ஓன் ஃபி கூறியுள்ளார். மாண்டவர்களில் நால்வர் ஆடவர், அறுவர் பெண்கள் என்று ‌ஷின்ஹுவா நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை கிராமத்தில் உள்ள கால்வாயிலிருந்து அசுத்தமான நீரைப் பருகிய மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர். சுமார் 50 குடும்பங்கள் வசிக்கும் அந்தச் சிறிய கிராமத்துக் கால்வாயின் ஓரத்தில் வளரும் செடிகளுக்கு விவசாயிகள் அடித்த பூச்சி மருந்து அந்தக் கால்வாயில் கலந்திருக்கும் என்று கூறப்படுகிறது. இன்னும் அதிகமானோர் பாதிப்புக்கு உள்ளாவதைத் தடுக்க அதிகாரிகள் நேற்று காலை கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.epaper.tamilmurasu.com.sg