அங்காரா: துருக்கிக்கு ஆயுதங்கள் விற்பனை செய்வதை நிறுத்துவதன் தொடர்பில் முன்மொழியப்பட்ட வரைவை அமெரிக்கா சட்டமாக் கினால் துருக்கி அதற்கு பதிலடி கொடுக்கும் என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மெவ்லுட் காவுசோக்லு நேற்று கூறியுள்ளார். அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் கடந்த வெள்ளிக்கிழமை துருக் கிக்கு ஆயுத விற்பனையைத் தற்காலிகமாக நிறுத்துவது உள் ளிட்ட 717 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ($956 பில்லியன்) மதிப்பிலான வருடாந்திர ஆயுதக் கொள்கைச் சட்டம் வெளியிடப் பட்டது.
முன்மொழியப்பட்டுள்ள அமெ ரிக்க தேசிய தற்காப்பு அதிகாரச் சட்டமானது தற்காப்புத் துறையை அமெரிக்கா, துருக்கி இடையிலான உறவு குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்கக்கோரும் எனவும் அறிக்கை நிறைவுபெறும் வரை துருக்கிக்கு முக்கியமான தற்காப்புக் கருவிகள் விற்கப் படுவது தடுத்து வைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் epaper.tamilmurasu.com.sg

