காபூல்: அரசாங்கம் நடத்தும் மின் உற்பத்தி நிலையத்துக்குச் சென்று கொண்டிருந்த ஏழு இந்தியப் பொறியாளர்களை நேற்று அடையாளம் தெரியாத துப்பாக்கிக் காரர்கள் கடத்தியதாக ஆப் கானிஸ்தான் போலிஸ் தெரிவித் துள்ளது. இந்தியாவின் வெளி யுறவு அமைச்சுடன் இது குறித்து தொடர்புகொண்டிருப்பதாக ஆப் கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தப் பொறியாளர்கள் ஆப் கானிஸ்தானின் பக்லான் வட்டாரத் தில் உள்ள மின் உற்பத்தி நிலை யத்தில் பணிபுரிபவர்கள் என்று ராய்ட்டர்ஸ் செய்தி குறிப்பிட்டது. ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஓட்டுநருடன் சேர்த்து அந்தப் பொறியாளர்களும் கடத்தப்பட்ட தாக போலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். கடத்தியவர்கள் யார் என்பதும் பிணைப்பணம் கேட்டார்களா என்பதும் தெரியவில்லை என்று ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டது.
மேலும்:epaper.tamilmurasu.com.sg

