தேர்தலை முன்னிட்டு சிங்கப்பூர்-ஜோகூர் பாலம் மற்றும் இரண்டாவது இணைப்பான துவாசில் நடைபெற்று வந்த சாலைப்பணிகள் மே 5 முதல் மே 13 ஆம் தேதி வரையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக 'பிளஸ் எக்ஸ்பிரஸ்வேஸ் பெர்ஹாட்' நிறுவனம் அறிவித்துள்ளது. தேர்தலில் வாக்களிக்க சிங்கப்பூரில் இருந்து ஜோகூர் வரும் மலேசியர்களுக்குத் தாமதத்தை ஏற்படுத்து வதற்காக இணைப்புப் பாதையில் சாலைப் பணிகள் பெற்று வருவதாக அண்மையில் பேஸ்புக்கில் பரவிய தகவலையடுத்து, அந்நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எப்போதுமே வாகன நெரிசல் ஏற்படுவதால், அங்கு அடிக்கடி சாலைப் பணிகள் நடப்பது வழக்கம் என்றும், என்றாலும் மே 9ஆம் தேதி பொதுத்தேர்தல் அன்று சிங்கப்பூரில் இருந்து மலேசியர்கள் ஜோகூர் வருவதற்கு எந்த ஒரு தடையும் இருக்காது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். மே 13 ஆம் தேதிக்குப் பின்னரே அடுத்த கட்ட சாலைப் பணிகள் தொடங்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்தது.

