மலேசிய தேர்தல்: சுப்ரா: சிகாமட்டில் பெல்டா குடியிருப்பாளர்களுக்கு உதவி

மலேசிய தேர்தல்: சுப்ரா: சிகாமட்டில் பெல்டா குடியிருப்பாளர்களுக்கு உதவி

1 mins read

சிகாமட் தொகுதியிலுள்ள பாலோங் தீமோர் டூவா, பாலோங் தீமோர் தீகா ஆகிய பெல்டா குடியிருப்புகளிலுள்ள 265 குடியிருப்பாளர்களுக்கு மறுநடவுக்கான உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்தக் குடியிருப்பாளர்களுக்குத் தலா 4,000 ரிங்கட் வழங்கப்படும் என அத்தொகுதியில் போட்டியிடும் தேசிய முன்னணி வேட்பாளர் டாக்டர் சுப்பிரமணியம் நேற்று அறிவித்தார்.

இந்த உதவித் தொகையை வழங்குவதற்கான அனுமதியைப் பிரதமர் நஜிப் வழங்கியதாக அவர் குறிப்பிட்டார். அந்த ஊக்குவிப்புத் தொகை நேற்றிலிருந்து வழங்கப்படுவதாகவும் பொதுத் தேர்தலுக்குள் அனைத்துப் பெல்டா குடியிருப்பாளர்களுக்கும் அத்தொகை வழங்கப்பட்டுவிடும் என்றும் அவர் கூறினார. சம்பந்தப்பட்ட பெல்டா குடியிருப்பாளர்களின் நிதிச் சுமையைக் குறைக்க இந்த உதவித்தொகை உதவும் என சுகாதார அமைச்சருமான சுப்பிரமணியம் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்: epaper.tamilmurasu.com.sg