மூளை செயலிழந்த 13 வயது சிறுவன் உயிர் பிழைத்த அதிசயம்

மூளை செயலிழந்த 13 வயது சிறுவன் உயிர் பிழைத்த அதிசயம்

1 mins read
69cfea0e-b9b9-45b8-ac67-5aede0654d27
-

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் 13 வயது அமெரிக்கச் சிறுவனின் மூளை செயலிழந்து விட்டதாக இவ்வாண்டு மார்ச் மாதம் மருத்துவர்கள் உறுதி செய்து, அவனது உறுப்புகளைத் தானம் செய்வதற்கான படிவங் களில் பெற்றோர் கையொப்ப மிட்ட மறுநாள், அச்சிறுவன் உயிர்பெற்று எழுந்த அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

டிரென்டன் மெக்கின்லி என்ற சிறுவன் ஒரு நண்பனின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, அவன் ஓட்டிய இழுவை வண்டி தடம்புரண்டு கவிழ்ந்து, அவனது தலையை நசுக்கிவிட்டதாக சிபிஎஸ் ஒளிபரப்பு நிறுவனம் செய்தி வெளியிட்டது. டிரென் டனின் மூளையில் கடுமையான காயம் ஏற்பட்டதுடன் மண்டை ஓடு ஏழு இடங்களில் உடைந்திருந்தது. ஒரு கட்டத்தில் டிரென்டன் 15 நிமிடங்களுக்கு இறந்து போயிருந்ததாக அவனது தாயார் ஜெனிஃபர் ரெயின்டல் உள்ளூர் ஊடகத்திடம் தெரி வித்தார். டிரென்டன் சில நாட் களுக்கு உயிர்காப்புச் சாதனத் துடன் இணைக்கப்பட்டிருந்ததாக அவனது குடும்பத்தினர் தெரி வித்தனர்.

அமெரிக்கச் சிறுவன் டிரென்டன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்