சிங்கப்பூர்: வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள் பலருக்கு வாக்குச் சீட்டுகள் சில நாட்களுக்கு முன்புதான் கிடைத்த போதிலும் கடைசி நேர வாய்ப்பை தவறவிடாமல் உரிய நேரத்தில் அந்த வாக்குச் சீட்டுகளை அவர்கள் அனுப்பி வைத்திருக்கின்றனர். திங்கட்கிழமை இரவு 7 மணிக்குத்தான் தனக்கு வாக்குச் சீட்டு கிடைத்தது என்றும் அதனை உரிய நேரத்தில் மலேசியாவுக்கு அனுப்பி வைத்ததாகவும் சிங்கப்பூரில் வசிக்கும் மலேசிய குடியுரிமை பெற்றவரான திருமதி அக்னஸ் கோய் கூறினார். ஒரு சிலர் வாக்குச் சீட்டுகளுடன் சிங்கப்பூரிலிருந்து ஈப்போவுக்கு புறப்பட்டுச் சென்றதாகவும் தகவல்கள் கூறின.
கடைசி நேரத்தில் வாக்களிக்க முயன்ற வெளிநாடுவாழ் மலேசியர்கள்
1 mins read

