நஜிப்: ஜிஎஸ்டிதான் நான் எடுத்த மிகவும் கடுமையான முடிவு

நஜிப்: ஜிஎஸ்டிதான் நான் எடுத்த மிகவும் கடுமையான முடிவு

1 mins read

கோலாலம்பூர்: மலேசியாவில் ஜிஎஸ்டி எனும் பொருள் சேவை வரியை நடப்புக்கு கொண்டுவந்ததுதான், 2009ல் பிரதமராக பதவி ஏற்றது முதல் தான் எடுத்த ஆகக் கடுமையான முடிவு என்று பிரதமர் நஜிப் தெரிவித்து இருக்கிறார். "அந்த வரி காரணமாக சில பொருட்கள், சேவைகளுக்கு ஆகும் செலவு அதிகரிக்கும் என்பது எனக்குத் தெரியும். அந்த அதிகரிப்பு சில மலேசியர்களுக்குச் சிரமமாக இருக்கும் என்பதும் எனக்குத் தெரியும்.

"இருந்தாலும் ஜிஎஸ்டி காரணமாக நிதி வளத்தைப் பொறுத்தவரையில் நாடு சுதந்திரமானதாக ஆகி இருக்கிறது. எண்ணெய் விலையை அளவுக்கு அதிகமாக சார்ந்திருக்க வேண்டிய தேவை அகன்று நாடு நிலையாகத் திகழ அந்த வரி உதவியிருக்கிறது," என்று நஜிப் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார். மக்களுக்கு கொஞ்ச காலத்திற்குச் சிரமம் இருந்தாலும் நீண்டகாலப்போக்கில் அவர்களுக்கு இந்த வரி காரணமாக வெகுமதிகள் கிடைக்கும் என்றும் அதை வரும் ஆண்டுகளில் மக்கள் உணர்வார்கள் என்றும் திரு நஜிப் குறிப்பிட்டு இருக்கிறார்.