மலேசியாவில் வாக்களிப்பு: 68,000 போலிசார் குவிப்பு

1 mins read

கோலாலம்பூர்: மலேசியாவில் வாக்களிப்பு நாளான இன்று நாடு முழுவதும் பாதுகாப்பு வலுப்படுத் தப்பட்டுள்ளது. கூடுதலாக 10,000 போலிசார் பணிகளில் அமர்த்தப் பட்டுள்ளனர். ஆக மொத்தம் 68,000 போலிசார் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து குடிமைத் தற்காப்புப் படை உறுப்பினர்கள் 18,000 பேர் மற்றும் தொண்டூழிய போலிசார் 3,700 பேரும் போலிசாருக்கு உதவுவர் என்று புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குப் பிரிவின் இயக்குநர் ஸுல்கிஃபிலி அப்துல்லா கூறினார். மத்திய சிறப்புப் படைப் பிரிவு போலிசாரின் தேர்தல் பணிகள் குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தபோது அவர் இந்த விவரங்களைக் கூறினார்.

இன்று வாக்களிக்கச் செல்லும் மக்கள் நெரிசலைத் தவிர்க்க முன்னதாகவே வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களித்த பின்னர் அப்பகுதியை விட்டுச் செல்வது நல்லது என்று அவர் ஆலோசனை கூறினார்.