சீனாவுக்காக உளவு பார்த்த அமெரிக்கர்

சீனாவுக்காக உளவு பார்த்த அமெரிக்கர்

1 mins read

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் மத்திய புலனாய்வைச் சேர்ந்த முன்னாள் அதிகாரி ஒருவர், சீனாவுக்காக உளவு பார்த்ததன்பேரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். எட்டு ஆண்டுகளுக்கு முன்னர், மத்திய புலாய்வுப் பிரிவின் சீன கட்டமைப்பு தகர்ந்து போனதற்கும் அவரது நடவடிக்கை களுக்கும் தொடர்பு இருப்பதாக ஊகிக்கப் படுகிறது. ஜெரி சுன் ‌ஷின் லீ என்ற அந்த ஆடவர் 2007ல் மத்திய புலனாய்வைவிட்டு வெளியேறினார்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர், சீன அதிகாரி களிடமிருந்து பணத்தைப் பெற்று அதற்கு பதிலாக, அமெரிக்காவின் தற்காப்பு சார்ந்த ரகசிய தகவல்களை அவர்களிடம் பகிர்ந்து கொண்டதாக அமெரிக்காவின் நீதித்துறை தெரிவித்தது. ஹாங்காங்கில் அப்போது இருந்த லீ, சீன அதிகாரிகளிடமிருந்து பெற்ற ரொக்கக் கட்டணங்களை மறைத்து வைத்திருந்த தாகவும் கூறப்படுகிறது. பின்னர் லீ கைது செய்யப்பட்டார். சீன அதிகாரிகள் தொடர்பான விவரங்கள் அவரது பயணப்பெட்டியில் இருந்ததை அமெரிக்க அதிகாரிகள் பின்னர் கண்டுபிடித்தனர்.