ஈரான் உடன்பாட்டிலிருந்து விலகியது அமெரிக்கா

1 mins read
687a1528-a233-4856-8187-602cc0190fa9
-

வா‌ஷிங்டன்: ஈரானுடனான அனைத்துலக அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்திருக்கிறார். அவரது அந்த முடிவால் மத்திய கிழக்கில் சர்ச்சைகள் அதிகரிக்கலாம் என்றும் உலக எண்ணெய் விநி யோகம் பாதிக்கப்படலாம் என்றும் கவனிப்பாளர்கள் கருதுகின் றனர். வெள்ளை மாளிகையில் திரு டிரம்ப் ஆற்றிய தொலைக்காட்சி உரையில், ஈரான் மீது வர்த்தகத் தடைகளை மீண்டும் விதிக்கப் போவதாகக் கூறினார்.

ஈரானுடன் அத்தகைய உடன்பாடு செய்து கொண்டிருக்கக் கூடாது என்றும் அது மோசமான ஒப்பந்தம்" என வும் அவர் கூறினார். 2015 ஆம் ஆண்டில் காணப்பட்ட அந்த உடன்படிக்கையில் ஈரானு டன், அமெரிக்கா உள்ளிட்ட ஆறு நாடுகள் இணைந்தன. ஒப்பந்தத்தின்படி, ஈரான் அதன் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப் படுத்தினால் பதிலுக்கு அதன் மீதான வர்த்தகத் தடைகள் அகற்றப்படும். அணு ஆயுதங்களை ஈரான் தயாரிப் பதைத் தடுப்பதே ஒப்பந்தத்தின் நோக்கம்.