தேர்தலில் வெற்றி பெற்ற பக்கத்தான் ஹரப்பானுக்கு அம்னோ இளையர் அணித் தலைவர் கைரி ஜமாலுதின் வாழ்த்து தெரிவித்துக்கொண்டார். "நான் எனது நாட்டை நேசிக்கிறேன். மலேசிய மக்களின் விருப்பத்தையும் நான் மதிக்கிறேன்," என்று அவர் இன்ஸ்டகிராம் பக்கத்தில் கூறியுள்ளார். அதிகார மாற்றம் சுமூகமாக நடைபெற வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்களின் விருப்பத்தை தேசிய முன்னணி கூட்டணி ஏற்றுக்கொள்ளும் என்றும் அவர் முன்னதாகக் கூறினார்.
பக்கத்தான் ஹரப்பானுக்கு கைரி ஜமாலுதின் வாழ்த்து
1 mins read

