சிரியாவில் உள்ள ஈரானிய இலக்குகள் மீது இஸ்ரேலிய ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியதில் 23 போராளிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறின. இஸ்ரேலியப் படையினரை நோக்கி ராக்கெட்டுகள் வீசப்பட் டதைத் தொடர்ந்து ஈரானிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது. இஸ்ரேலியப் பகுதிக்குள் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது ஈரான்தான் என்று இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. ஏவுகணைத் தாக்குதலால் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் மோதல் அதிகரித்து வருகிறது. ஈரானுடன் அனைத் துலக நாடுகள் செய்துகொண்ட அணுசக்தி உடன்பாட்டிலிருந்து அமெரிக்கா விலகுவதாக அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்த மறுநாள் இந்தச் சம்பவம் நடந் துள்ளது.
சிரியாவில் ஈரானிய இலக்குகள் மீது இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல்
1 mins read

