பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

1 mins read
1e4ebc7b-b46c-45a9-a908-0c2b83bc8f31
-

கோலாலம்பூர்: மலேசியத் தேர் தலில் ஏதிர்க்கட்சி கூட்டணியான பக்கத்தான் ஹரப்பான் மொத்தம் 113 நாடாளுமன்ற இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அக்கூட்டணியின் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். புதன்கிழமை இரவு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் கோலாலம்பூர் நகர மையத்திற்கு அருகே ஒன்றுகூடிய ஆயிரக் கணக்கான ஆதரவாளர்கள் வாண வேடிக்கைகளுடன் மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.

பக்கத்தான் ஹரப்பான் வெற்றியைக் கொண்டாட தெருக் கள் மற்றும் சாலைகளில் ஒன்று திரண்ட சிரம்பான் குடியிருப் பாளர்கள் சாலையில் சென்ற கார்களையும் பொருட்படுத்தாது தேசியக் கொடியை அசைத்தபடி ஊர்வலமாகச் சென்றனர். இதுபோன்று இன்னும் பல இடங்களில் எதிர்க்கட்சி கூட் டணி ஆதரவாளர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் திளைத்தனர். மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் தலைமையிலான கூட்டணி, புதன்கிழமை நடந்த தேர்தலில் எதிர்பாராத வெற்றியைப் பெற்று அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி யுள்ளது.

தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதன் ஆதரவாளர்கள் வாண வேடிக்கைகளுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்