எதிர்கால ஜூரோங் வட்டார ரயில் பாதையில் தனிச்சிறப்புமிக்க முறையில் வடிவமைக்கப்படும் பெட்டிகள் பயன்படுத்தப்படும். அவை வழக்கமான எம்ஆர்டி தடங்களில் காணப்படும் ரயில் பெட்டிகளைவிட சிறியதாக இருக்கும் என்று நிலப் போக்கு வரத்து ஆணையம் தெரிவித்தது. 24 கிலோ மீட்டர் பாதையில் 24 நிலையங்கள் அமையும் ஜூரோங் வட்டாரப் பாதை ஏற் கெனவே கட்டடங்கள் கட்டப் பட்டுள்ள இடத்தில் தரைத் தளத் திற்கு மேலே அமைகிறது. இதற்கு ஏற்ப ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்படுகின்றன என்று ஆணையம் குறிப்பிட்டது.
ஜூரோங் வட்டாரப் பாதைக்கு சிறிய ரயில் பெட்டிகள்
1 mins read

