'அன்வாருக்கு பொதுமன்னிப்பு'

'அன்வாருக்கு பொதுமன்னிப்பு'

1 mins read

சிறைத் தண்டனையை அனு பவித்துவரும் திரு அன்வார் இப்ராகிமுக்கு முழுமையான மன்னிப்பை உடனடியாக வழங்க மன்னர் ஒப்புதல் அளித் திருப்பதாக நேற்று செய்தி யாளர்களிடம் மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது தெரிவித்தார். பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக் கட்சிகள் ஒன்றின் பொதுச் செயலாளரான திரு லிம் குவான் எங்கிடம் மன்னர் இதனைக் குறிப் பிட்டதாக டாக்டர் மகாதீர் கூறினார். அதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்ட அவர், திரு அன்வார் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதற்கு சிறிது காலம் பிடிக்கும் என்றார். இதற்கிடையே, திரு அன்வார் இப்ராகிம் இன்னும் ஒரு சில நாட்களில் விடுவிக்கப் பட்டு அவருக்கு முழு அரச மன்னிப்பு ஒரு வாரத்துக்குள் வழங்கப்படக்கூடும் என்று திரு அன்வாரின் மனைவி வான் அஸிஸா நேற்றுக் குறிப்பிட்டார்.